• May 28 2025

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உத்தியோகத்தர்; விபத்தை ஏற்படுத்திய நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

Chithra / May 27th 2025, 4:49 pm
image

 

குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சம்பவத்தன்று, குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் தனது கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது,

மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவர் குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளனர்.

இதன்போது குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உத்தியோகத்தர்; விபத்தை ஏற்படுத்திய நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்  குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் தனது கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது,மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவர் குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளனர்.இதன்போது குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்துள்ளது.பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement