• Jul 07 2025

26 வயது பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற 17 வயது சிறுவன்; சிறுவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

Chithra / Jul 6th 2025, 2:51 pm
image


இரத்தினபுரி - குருவிட்ட, தெவிபஹல, தோடன் எல்லவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம்போட முயன்றபோதே இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஜூலை 2 ஆம் திகதி  மதியம் பாதிக்கப்பட்ட பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்

ஹென்யாய, தேவிபஹலலாவைச் சேர்ந்த ஷாலிகா மதுஷானி (26) என்ற பெண்​ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான தங்கச்  சங்கிலி, தொலைபேசி  மற்றும் கைப்பை ஆகியவை  தொலைதூரப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

பாடசாலைக்குச் செல்லாத சந்தேக நபர்,  கடந்த வியாழக்கிழமை  கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவர் தெஹியோவிட்ட சிறுவர் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு 18 வயது நிரம்பியதும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கு நேற்றுமுன்தினம் (4) மதியம் குருவிட்ட மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

 


26 வயது பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற 17 வயது சிறுவன்; சிறுவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம் இரத்தினபுரி - குருவிட்ட, தெவிபஹல, தோடன் எல்லவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம்போட முயன்றபோதே இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்ஜூலை 2 ஆம் திகதி  மதியம் பாதிக்கப்பட்ட பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்ஹென்யாய, தேவிபஹலலாவைச் சேர்ந்த ஷாலிகா மதுஷானி (26) என்ற பெண்​ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான தங்கச்  சங்கிலி, தொலைபேசி  மற்றும் கைப்பை ஆகியவை  தொலைதூரப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.பாடசாலைக்குச் செல்லாத சந்தேக நபர்,  கடந்த வியாழக்கிழமை  கைதுசெய்யப்பட்டார்.நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவர் தெஹியோவிட்ட சிறுவர் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபருக்கு 18 வயது நிரம்பியதும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கு நேற்றுமுன்தினம் (4) மதியம் குருவிட்ட மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement