• Dec 28 2025

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 மில்லியன் பெறுமதியான மருந்துகள் நன்கொடை!

dileesiya / Dec 27th 2025, 5:15 pm
image

நாட்டில் அண்மையில் நிலவிய சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, 'கெக்கும' (Kakkuma) அமைப்பினால் சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இன்று (27) காலை தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'கெக்கும' அமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அசோக ஜயசேன உள்ளிட்ட குழுவினரால் இந்த மருந்துத் தொகுதி தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்த மருந்துத் தொகுதியானது வெள்ளம் மற்றும் மண்சரிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சு மற்றும் தன்னார்வக் குழுக்களின் பங்களிப்புடன் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக விசேட மருத்துவ முகாம்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது." என விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 மில்லியன் பெறுமதியான மருந்துகள் நன்கொடை நாட்டில் அண்மையில் நிலவிய சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, 'கெக்கும' (Kakkuma) அமைப்பினால் சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் இன்று (27) காலை தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டன.தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'கெக்கும' அமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அசோக ஜயசேன உள்ளிட்ட குழுவினரால் இந்த மருந்துத் தொகுதி தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.இந்த மருந்துத் தொகுதியானது வெள்ளம் மற்றும் மண்சரிவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சு மற்றும் தன்னார்வக் குழுக்களின் பங்களிப்புடன் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக விசேட மருத்துவ முகாம்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது." என விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement