கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பதை இன்னும் ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளலாம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதிகளவான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான ஆணை தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.
சகல எதிர்க்கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் இணைத்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கிறது.
கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பதை நாட்டு மக்கள் இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பான்மை பலத்துடன் நாங்களே ஆட்சியமைப்போம். சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
இவ்வாறான கருத்துகளால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை எதிர்கட்சிகள் வெகுவிரைவில் தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மை பலத்துடன் கொழும்பு மாநகர சபையை நாமே கைப்பற்றுவோம்- அநுர தரப்பு சூளுரை. கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பதை இன்னும் ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளலாம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதிகளவான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான ஆணை தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.சகல எதிர்க்கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் இணைத்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கிறது.கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பதை நாட்டு மக்கள் இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரும்பான்மை பலத்துடன் நாங்களே ஆட்சியமைப்போம். சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.இவ்வாறான கருத்துகளால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை எதிர்கட்சிகள் வெகுவிரைவில் தெரிந்துகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.