• May 29 2025

வவுனியா மாநகரசபையினால் 60க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

Thansita / May 26th 2025, 8:44 pm
image

வவுனியா மாநகரசபை பகுதியில்  பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலியாக திரிந்த 60க்கு மேற்பட்ட மாடுகள் மாநகரசபையால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநகரசபையினால் கட்டாக்காலி மாடுகளால்  இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இரவு வேளைகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கால்நடைகளை மாநகர சபையினரால் பிடிக்கப்படவுள்ளதாக பொது மக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலமாக  அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வறிவித்லுக்கு அமைவாக 25.05.2025ம் திகதி இரவு வேளைகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்த 60 க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு நகர சபையின் பராமரிப்பில் உள்ளன.

குறித்த கால்நடைகளை உரிமையாளர்கள் 10 நாட்களுக்குள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்திய, அதற்குரிய தண்டப்பணத்தினைச் செலுத்தி தமது கால்நடைகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமென மநகரசபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 10 நாட்களினுள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய மாநகரசபை நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வவுனியா மாநகரசபையினால் 60க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு வவுனியா மாநகரசபை பகுதியில்  பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலியாக திரிந்த 60க்கு மேற்பட்ட மாடுகள் மாநகரசபையால் பிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மாநகரசபையினால் கட்டாக்காலி மாடுகளால்  இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இரவு வேளைகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கால்நடைகளை மாநகர சபையினரால் பிடிக்கப்படவுள்ளதாக பொது மக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலமாக  அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.இவ்வறிவித்லுக்கு அமைவாக 25.05.2025ம் திகதி இரவு வேளைகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்த 60 க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு நகர சபையின் பராமரிப்பில் உள்ளன.குறித்த கால்நடைகளை உரிமையாளர்கள் 10 நாட்களுக்குள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்திய, அதற்குரிய தண்டப்பணத்தினைச் செலுத்தி தமது கால்நடைகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமென மநகரசபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை 10 நாட்களினுள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய மாநகரசபை நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement