திருமலையில் மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள சூரநகர் பகுதியில் நேற்றையதினம்(01) மாலை இடம்பெற்றுள்ளது.
வயலுக்கு போடப்பட்ட யானை பாதுகாப்பு மின்சார வேலியை சரி செய்து கொண்டிருந்தபோது இளைஞனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன் பின்னர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்தவரை காப்பாற்ற முற்பட்ட மற்றைய நபரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் மாமன் மருமகன் முறையுடையவர்கள் என தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் நேற்றிரவு பார்வையிட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பரிதாபமாக உயிரிழப்பு. திருமலையில் மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள சூரநகர் பகுதியில் நேற்றையதினம்(01) மாலை இடம்பெற்றுள்ளது.வயலுக்கு போடப்பட்ட யானை பாதுகாப்பு மின்சார வேலியை சரி செய்து கொண்டிருந்தபோது இளைஞனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.இதன் பின்னர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்தவரை காப்பாற்ற முற்பட்ட மற்றைய நபரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இருவரும் மாமன் மருமகன் முறையுடையவர்கள் என தெரியவருகிறது.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் நேற்றிரவு பார்வையிட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.