மட்டக்களப்பு - தாந்தாமலையில் சுயம்புருவ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குத் தெற்கே அமைந்துள்ள தாந்தமலை முருகன் ஆலயம் இலங்கையின் “சின்னக்கதிர்காமம்” எனப் போற்றப்படுகின்றது.
இந்த ஆலயம் இராமாயண காலம் முதலே தொடர்புடையது. இங்கே மலையினை சுற்றி வைப்பு திரவியங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இது இராமன் பூசித்த லிங்கம் என்றும் அங்கே மலைமீது ஆதிக்குமரி மலைமக்கள் வாழ்ந்ததும், சுயம்பு லிங்கத்தையும் தல விருட்சத்தையும் வழிபட்டது தெரிகிறது.
இதை தாண்டவகிரி/ தாண்டவமலை என்றும் வழங்குவதால் காலப்போக்கில் தாந்தாமலை ஆனது. ஆடகசவுந்தரி அரசியார் இங்கே தீர்த்தத்தில் குளித்து சாபம் நீங்கப்பெற்றார் என்பது வரலாறு.
இராவணன் விபீடணன் காலம் முதலே அங்கே பொன் கிடாரங்கள் மலை மலையாகக் குவிந்துள்ளது என்றும் அது விதியாளியின் கைகளுக்கு மட்டும் கிட்டும் என்றும் கூறப்படுகிறது
இராஜாங்க நிதி கிடாரங்கள், பொன் ஆபரணங்கள், இறக்கைகளுடன் பொன்புரவியும் இருப்பதாக அறியப்படுகிறது.
ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 1975 இல் கடவுளின் காட்சியைப்பெற்று தாந்தா மலை குகையில் வாழ்ந்து ஞானத்தைத் தீர்த்தத்தின் மூலமாக மக்களுக்கு வழங்கியவரே "முத்தையா முனிவர்" என்ற துறவி.
ஆங்கோர் சுனையும் தடாகமும் இருக்க அருகே குன்றில் திரவியங்கள் கொட்டிக்கிடக்க, அதற்கு வேதாள பூதங்கள் காவலுக்கு இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
அங்கே குகைகளில் பழைய தமிழ் பிராமி எழுத்துகளும் அக்கால மலைமக்களின் ஆயுதங்களும் தொல்லியல்துறை கண்டெடுத்தது.
இப்படிப்பட்ட குகையில்தான் தவத்திரு முத்தையா முனிவர் பலகாலம் வெறும் பாலும் பழமும் மட்டுமே உட்கொண்டு தியானத்தில் இருந்து முருகனின் காட்சி கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தாந்தாமலையில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முத்தையா பலகாலம் அங்கேயே வாழ்ந்தார். அங்கே நிலத்தில் மா, பலா, வாழை, தோடை பயிரிட்டிருந்தார் என்றும் அவை பூத்துக் காய்க்கும் வரை அங்கே இருந்து தங்கம் எடுத்தார் என்றும், அதன்பின் மரங்களின் பயன் முடிந்ததும் அவ்விடத்தைவிட்டுப் பிரிந்தார்" என்றும் வரலாற்று இதிகாசங்கள் கூறுகின்றன.
இலங்கையின் “சின்னக் கதிர்காமம்” தாந்தாமலை முருகன் ஆலயம்; மட்டக்களப்பின் வரலாற்றை எடுத்துக் கூறும் ஓர் பார்வை மட்டக்களப்பு - தாந்தாமலையில் சுயம்புருவ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குத் தெற்கே அமைந்துள்ள தாந்தமலை முருகன் ஆலயம் இலங்கையின் “சின்னக்கதிர்காமம்” எனப் போற்றப்படுகின்றது. இந்த ஆலயம் இராமாயண காலம் முதலே தொடர்புடையது. இங்கே மலையினை சுற்றி வைப்பு திரவியங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.இது இராமன் பூசித்த லிங்கம் என்றும் அங்கே மலைமீது ஆதிக்குமரி மலைமக்கள் வாழ்ந்ததும், சுயம்பு லிங்கத்தையும் தல விருட்சத்தையும் வழிபட்டது தெரிகிறது. இதை தாண்டவகிரி/ தாண்டவமலை என்றும் வழங்குவதால் காலப்போக்கில் தாந்தாமலை ஆனது. ஆடகசவுந்தரி அரசியார் இங்கே தீர்த்தத்தில் குளித்து சாபம் நீங்கப்பெற்றார் என்பது வரலாறு.இராவணன் விபீடணன் காலம் முதலே அங்கே பொன் கிடாரங்கள் மலை மலையாகக் குவிந்துள்ளது என்றும் அது விதியாளியின் கைகளுக்கு மட்டும் கிட்டும் என்றும் கூறப்படுகிறதுஇராஜாங்க நிதி கிடாரங்கள், பொன் ஆபரணங்கள், இறக்கைகளுடன் பொன்புரவியும் இருப்பதாக அறியப்படுகிறது.ஸ்ரீ முருகன் ஆலயத்தில் 1975 இல் கடவுளின் காட்சியைப்பெற்று தாந்தா மலை குகையில் வாழ்ந்து ஞானத்தைத் தீர்த்தத்தின் மூலமாக மக்களுக்கு வழங்கியவரே "முத்தையா முனிவர்" என்ற துறவி.ஆங்கோர் சுனையும் தடாகமும் இருக்க அருகே குன்றில் திரவியங்கள் கொட்டிக்கிடக்க, அதற்கு வேதாள பூதங்கள் காவலுக்கு இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.அங்கே குகைகளில் பழைய தமிழ் பிராமி எழுத்துகளும் அக்கால மலைமக்களின் ஆயுதங்களும் தொல்லியல்துறை கண்டெடுத்தது. இப்படிப்பட்ட குகையில்தான் தவத்திரு முத்தையா முனிவர் பலகாலம் வெறும் பாலும் பழமும் மட்டுமே உட்கொண்டு தியானத்தில் இருந்து முருகனின் காட்சி கிடைக்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.தாந்தாமலையில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முத்தையா பலகாலம் அங்கேயே வாழ்ந்தார். அங்கே நிலத்தில் மா, பலா, வாழை, தோடை பயிரிட்டிருந்தார் என்றும் அவை பூத்துக் காய்க்கும் வரை அங்கே இருந்து தங்கம் எடுத்தார் என்றும், அதன்பின் மரங்களின் பயன் முடிந்ததும் அவ்விடத்தைவிட்டுப் பிரிந்தார்" என்றும் வரலாற்று இதிகாசங்கள் கூறுகின்றன.