• May 03 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்..!

Sharmi / May 2nd 2025, 1:52 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 388  முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 101 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் 38 வேட்பாளர்களும் 168 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 36 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 388  முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 101 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் 38 வேட்பாளர்களும் 168 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 36 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement