• Aug 14 2026

கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு - வேலணையிலும் ஒருவர் பலி

Chithra / Aug 12th 2026, 10:00 am
image


கற்பிட்டி, குரக்கன்ஹேன (Kurakkanhena) பகுதியில் உள்ள நீரேரியில் குடும்பத்தினர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


இந்தச் சம்பவத்தில் 7 வயதுடைய சிறுவனும், 13 வயதுடைய சிறுமியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த குடும்பத்தினர் மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காக படகில் சென்றுகொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது.


இதன்போது நீரில் மூழ்கிய இரு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில், அவர்களது தந்தை மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த 52 வயதுடைய நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் தொடர்பிலும் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கற்பிட்டியில் படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு - வேலணையிலும் ஒருவர் பலி கற்பிட்டி, குரக்கன்ஹேன (Kurakkanhena) பகுதியில் உள்ள நீரேரியில் குடும்பத்தினர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில் 7 வயதுடைய சிறுவனும், 13 வயதுடைய சிறுமியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த குடும்பத்தினர் மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காக படகில் சென்றுகொண்டிருந்தபோதே, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது.இதன்போது நீரில் மூழ்கிய இரு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில், அவர்களது தந்தை மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த 52 வயதுடைய நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பிலும் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement