• Aug 12 2026

மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகம்: சிறைச்சாலை அதிகாரி கைது

Chithra / Aug 12th 2026, 10:09 am
image


கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது நடவடிக்கையின்போது, சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரின் ‘வாட்ஸ்அப்’ அழைப்பின் ஊடாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் போதைப்பொருட்களை சேகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த போதைப்பொருட்களை வனாத்த வீதியில் உள்ள மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த அதிகாரி கடந்த ஜனவரி மாதமே மெகசின் சிறைச்சாலையில் சேவையில் இணைந்துள்ளதுடன், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகம்: சிறைச்சாலை அதிகாரி கைது கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது நடவடிக்கையின்போது, சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரின் ‘வாட்ஸ்அப்’ அழைப்பின் ஊடாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தான் போதைப்பொருட்களை சேகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.குறித்த போதைப்பொருட்களை வனாத்த வீதியில் உள்ள மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அதிகாரி கடந்த ஜனவரி மாதமே மெகசின் சிறைச்சாலையில் சேவையில் இணைந்துள்ளதுடன், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement