• Aug 11 2026

திருகோணமலையில் பேருந்து மீது டிப்பர் வாகனம் மோதி விபத்து

dorin / Aug 11th 2026, 11:16 am
image

திருகோணமலையில் இருந்து புல்மோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி நேற்றுமாலை புடவைகட்டு பகுதியில் விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

குறித்த பயணிகள் போக்குவரத்து பஸ் புடவைக்கட்டு பகுதியில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எதுவுமின்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

எனினும், மோதிய வேகத்தில் பேருந்தின் பின்பகுதியும், டிப்பர் வாகனத்தின் முன்பகுதியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த குச்சவெளி பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் பேருந்து மீது டிப்பர் வாகனம் மோதி விபத்து திருகோணமலையில் இருந்து புல்மோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி நேற்றுமாலை புடவைகட்டு பகுதியில் விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.குறித்த பயணிகள் போக்குவரத்து பஸ் புடவைக்கட்டு பகுதியில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் பலமாக மோதியுள்ளது.இந்த விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்தபோதிலும், தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எதுவுமின்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.எனினும், மோதிய வேகத்தில் பேருந்தின் பின்பகுதியும், டிப்பர் வாகனத்தின் முன்பகுதியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த குச்சவெளி பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement