• Aug 12 2026

மொனராகலையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இ.போ.ச பேருந்து – சாரதி காயம்

Chithra / Aug 11th 2026, 12:38 pm
image


மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, புத்தல – மஹகொடய பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.


பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்தில் பேருந்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று வாஸ்கடுவ - காலி வீதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாஸ்கடுவ - காலி வீதியில் குறித்த கார் எதிர்ப்புறப் பாதைக்கு செல்ல முயற்சித்தபோது, எதிரே வந்த பாதசாரிகள் மீது மோதியதுடன் சாலையோரத்தின் இரண்டு எல்லைத் தூண்களை மோதிச் சேதப்படுத்திய பின்னர் சாலையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாரதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


மொனராகலையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இ.போ.ச பேருந்து – சாரதி காயம் மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, புத்தல – மஹகொடய பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் பேருந்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று வாஸ்கடுவ - காலி வீதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாஸ்கடுவ - காலி வீதியில் குறித்த கார் எதிர்ப்புறப் பாதைக்கு செல்ல முயற்சித்தபோது, எதிரே வந்த பாதசாரிகள் மீது மோதியதுடன் சாலையோரத்தின் இரண்டு எல்லைத் தூண்களை மோதிச் சேதப்படுத்திய பின்னர் சாலையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாரதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement