• Aug 12 2026

மன்னாரில் சமூக முன்னேற்ற முன்முயற்சிக்கான அமைப்பு உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு

dorin / Aug 11th 2026, 11:36 am
image

மன்னார் மாவட்டத்தில் சமூக முன்னேற்றம், மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக வலுவூட்டலை முன்னெடுக்கும் நோக்கில் செயற்படவுள்ள Social Momentum Initiative Organization (SMIO) – சமூக முன்னேற்ற முன்முயற்சிக்கான அமைப்பு தனது அலுவலகத்தை இன்று (10) மன்னாரில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மன்னார் மாவட்ட சங்கத்தின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக SMIO நிறுவனத்தின் பெயர் பலகை மற்றும் அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், SMIO நிறுவனத்தின் நோக்கம், எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட சர்வமதத் தலைவர்கள் SMIO நிறுவனத்தின் எதிர்காலப் பணிகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர்.

சமூக நல்லிணக்கம், சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் நீதியை வலுப்படுத்துவதில் சமூக அமைப்புகளின் பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இந்நிகழ்வில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

SMIO நிறுவனம் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, சமூக இயக்கங்களை வலுப்படுத்தல், இளைஞர் வலுவூட்டல், பெண்களின் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், சமூக சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட துறைகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறது.

சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து, அவர்களின் குரல்கள் மற்றும் தேவைகளை உரிய தளங்களுக்கு கொண்டு செல்வதுடன், இளைஞர்கள் மற்றும் பெண்களின் சமூகப் பங்கேற்பை அதிகரித்து, மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட நிலையான சமூக மாற்றத்தை உருவாக்குவதும் SMIO நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகளில் முக்கிய இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன்னாரில் சமூக முன்னேற்ற முன்முயற்சிக்கான அமைப்பு உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு மன்னார் மாவட்டத்தில் சமூக முன்னேற்றம், மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக வலுவூட்டலை முன்னெடுக்கும் நோக்கில் செயற்படவுள்ள Social Momentum Initiative Organization (SMIO) – சமூக முன்னேற்ற முன்முயற்சிக்கான அமைப்பு தனது அலுவலகத்தை இன்று (10) மன்னாரில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது.இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மன்னார் மாவட்ட சங்கத்தின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முக்கிய அம்சமாக SMIO நிறுவனத்தின் பெயர் பலகை மற்றும் அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், SMIO நிறுவனத்தின் நோக்கம், எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட சர்வமதத் தலைவர்கள் SMIO நிறுவனத்தின் எதிர்காலப் பணிகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர்.சமூக நல்லிணக்கம், சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் நீதியை வலுப்படுத்துவதில் சமூக அமைப்புகளின் பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இந்நிகழ்வில் கருத்துக்கள் பகிரப்பட்டன.SMIO நிறுவனம் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, சமூக இயக்கங்களை வலுப்படுத்தல், இளைஞர் வலுவூட்டல், பெண்களின் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், சமூக சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட துறைகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறது.சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து, அவர்களின் குரல்கள் மற்றும் தேவைகளை உரிய தளங்களுக்கு கொண்டு செல்வதுடன், இளைஞர்கள் மற்றும் பெண்களின் சமூகப் பங்கேற்பை அதிகரித்து, மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட நிலையான சமூக மாற்றத்தை உருவாக்குவதும் SMIO நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகளில் முக்கிய இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement