மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாகவும், 570க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படவிளக்கம்
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சொகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக பெரெய்ரா, மெனிசாலேஸ், குவிப்டோ, ஆர்மேனியா, கார்ட்டாகோ மற்றும் புவனவென்ச்சுரா உள்ளிட்ட விமான நிலையங்களில் வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
மேலும், இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் 9 மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
அண்டை நாடான வெனிசுலாவின் டச்சிரா, பரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 132 ஆக உயர்வு மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாகவும், 570க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.படவிளக்கம்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சொகோ மாகாணத்தில் 103 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் சேவை மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக பெரெய்ரா, மெனிசாலேஸ், குவிப்டோ, ஆர்மேனியா, கார்ட்டாகோ மற்றும் புவனவென்ச்சுரா உள்ளிட்ட விமான நிலையங்களில் வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.மேலும், இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் 9 மாகாணங்களிலும் 32 மாகாணத் தலைநகரங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.அண்டை நாடான வெனிசுலாவின் டச்சிரா, பரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.