• Sep 08 2025

இன்று தென்படவுள்ள முழு சந்திரகிரகணம்;மக்கள் பார்வையிட சென்னையில் பத்து இடங்களில் ஏற்பாடு!

shanuja / Sep 7th 2025, 8:48 pm
image

பல ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று இரவு தென்படவுள்ள முழு சந்திரகிரகணத்தைப் பார்வையிட சென்னையில் 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  


இன்று இரவு 8.58 மணிக்கு தோன்றவுள்ள சந்திரகிரகணம் இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். 


சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருட்டாக இருக்கும்.


இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம். 


பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும். பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும்.


சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.


2022 ஆம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்நிலையில் இன்று இரவு நீண்ட நேரம் நடைபெறும் சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க, சென்னை வானியல் குழுமம் சார்பில், 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம். கோவூர், நாவலூர் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று தென்படவுள்ள முழு சந்திரகிரகணம்;மக்கள் பார்வையிட சென்னையில் பத்து இடங்களில் ஏற்பாடு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று இரவு தென்படவுள்ள முழு சந்திரகிரகணத்தைப் பார்வையிட சென்னையில் 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இன்று இரவு 8.58 மணிக்கு தோன்றவுள்ள சந்திரகிரகணம் இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருட்டாக இருக்கும்.இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம். பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும். பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும்.சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.2022 ஆம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்நிலையில் இன்று இரவு நீண்ட நேரம் நடைபெறும் சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க, சென்னை வானியல் குழுமம் சார்பில், 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம். கோவூர், நாவலூர் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement