• Oct 12 2025

அடிச்சு உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி; ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்புப் பணிகள்!

shanuja / Oct 9th 2025, 4:31 pm
image

செம்மணியில் மனிதபுதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.


செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.


அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.


இந்நிலையில், நேற்று (08) செம்மணியில் இருந்த குறித்த சிறு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது 


இந்த சம்பவமானது போராட்டத்தை முடக்குவதை நோக்காக கொண்டதா இல்லை மக்களை  அச்சத்தை ஏற்படுத்துவதா என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.


அநியாயத்திற்கு எதிரான குரலாக அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபிக்கே அநியாயம் ஏற்பட்ட விடயம் மக்கள் மத்தியில் விசனத்தையும், மிகுந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இவ்வாறான பின்னணியில் தற்போது அணையா விளக்கு தூபியின் புனரமைப்புப் பணிகள்  உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

அடிச்சு உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி; ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்புப் பணிகள் செம்மணியில் மனிதபுதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று (08) செம்மணியில் இருந்த குறித்த சிறு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவமானது போராட்டத்தை முடக்குவதை நோக்காக கொண்டதா இல்லை மக்களை  அச்சத்தை ஏற்படுத்துவதா என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.அநியாயத்திற்கு எதிரான குரலாக அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபிக்கே அநியாயம் ஏற்பட்ட விடயம் மக்கள் மத்தியில் விசனத்தையும், மிகுந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் தற்போது அணையா விளக்கு தூபியின் புனரமைப்புப் பணிகள்  உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement