• Jul 07 2025

மதுரங்குளியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக வீதி!

Chithra / Jun 1st 2025, 8:39 am
image

 

புத்தளம் - மதுரங்குளி, தொடுவா பிரதான வீதியின் டச்சுப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அமைக்கப்பட்ட தற்காலிக பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் அவ்வீதியுடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், மதுரங்குளி – தொடுவா வீதியின் போக்குவரத்திற்காக டச்சுப் பாலத்திற்கு அருகில் மதுரங்குளி வர்த்தக சங்கம் உள்ளிட்ட ஏனைய சங்கங்கள், தனவந்தர்களின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதை கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக குறித்த தற்காலிக வீதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அந்த வீதியுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, மதுரங்குளி மல்லம்பிட்டி பாலமும் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பாலத்திற்கும் அருகில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தற்காலிக வீதியும் சேதமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியில் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு பாலங்களுக்கும் இடையில் தற்காலிக வீதிகள் அமைக்கப்பட்டு, அந்த வீதியூடாக கனரக வாகனங்கள் போக்குவரத்து செய்வதற்கு தடை என அறிவித்தல் பலகையும் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த தற்காலிக வீதியில் கனரக வாகனங்கள் பயணித்தமையே அந்த வீதிகள் சேதமடைவதற்கு காரணமாகும் என மக்களும், வாகன சாரதிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.


மதுரங்குளியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக வீதி  புத்தளம் - மதுரங்குளி, தொடுவா பிரதான வீதியின் டச்சுப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அமைக்கப்பட்ட தற்காலிக பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் அவ்வீதியுடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், மதுரங்குளி – தொடுவா வீதியின் போக்குவரத்திற்காக டச்சுப் பாலத்திற்கு அருகில் மதுரங்குளி வர்த்தக சங்கம் உள்ளிட்ட ஏனைய சங்கங்கள், தனவந்தர்களின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதை கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக குறித்த தற்காலிக வீதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அந்த வீதியுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளது.இதேவேளை, மதுரங்குளி மல்லம்பிட்டி பாலமும் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பாலத்திற்கும் அருகில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.எனினும் குறித்த தற்காலிக வீதியும் சேதமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியில் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு பாலங்களுக்கும் இடையில் தற்காலிக வீதிகள் அமைக்கப்பட்டு, அந்த வீதியூடாக கனரக வாகனங்கள் போக்குவரத்து செய்வதற்கு தடை என அறிவித்தல் பலகையும் போடப்பட்டுள்ளன.இவ்வாறு கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த தற்காலிக வீதியில் கனரக வாகனங்கள் பயணித்தமையே அந்த வீதிகள் சேதமடைவதற்கு காரணமாகும் என மக்களும், வாகன சாரதிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now