இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த நிகழ்வின் காணொளி ஒன்று வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த விசித்திர நிகழ்வு தாய்லாந்தில் பதிவாகியுள்ளது. தாய்லாந்தில் வசிக்கும் ஒரு பெற்றோருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அதில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளனர்.
தற்போது அந்த இரட்டையர்களான குழந்தைகளுக்கு 4 வயது மட்டுமே ஆகின்றது. அந்தக் குழந்தைகள் இருவருக்கும் பெற்றோரே திருமணம் செய்து வைத்த விசித்திர நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கமாகும்.
ஆண் - பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதிர்ஷ்டம் என்றும் அந்நாட்டில் உள்ள புத்த மதத்தினர் நம்புகின்றனர்.
அதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இரட்டைக் குழந்தைகளுக்கு 4 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இரட்டைக் குழந்தைகள் முன்ஜென்ம காதலர்கள் -சிறுவர்களின் திருமண காணொளி இணையத்தில் வைரல் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த நிகழ்வின் காணொளி ஒன்று வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த விசித்திர நிகழ்வு தாய்லாந்தில் பதிவாகியுள்ளது. தாய்லாந்தில் வசிக்கும் ஒரு பெற்றோருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அதில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது அந்த இரட்டையர்களான குழந்தைகளுக்கு 4 வயது மட்டுமே ஆகின்றது. அந்தக் குழந்தைகள் இருவருக்கும் பெற்றோரே திருமணம் செய்து வைத்த விசித்திர நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கமாகும்.ஆண் - பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதிர்ஷ்டம் என்றும் அந்நாட்டில் உள்ள புத்த மதத்தினர் நம்புகின்றனர்.அதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த இரட்டைக் குழந்தைகளுக்கு 4 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.