யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகரான வேடன் எனப்படும் ஹிரந்தாஸ் முரளியின் பாடலொன்று, கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் இந்தியாவின் கேரளாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேடன், மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் பிரபலமான பாடகராக இருந்து வருகின்றார்.
இவரின் பாடல்கள் ஈழத்தில் இடம்பெற்ற யுத்தம் சார்ந்ததாகவும், சாதி, மதம் உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதாக இடம்பெற்று வருவதால் அனைவரிடத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் வேடன்.
இந்நிலையில், வேடனின் பாடல்களில் ஒன்றான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ – Bhoomi Njan Vazhunidam’ எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடத்திட்டத்தில், பிரபல பொப் பாடகர் மறைந்த மைக்கல் ஜெக்சனின் ‘They Don’t Care About Us’ எனும் பாடலுடன் வேடனின் பாடல் ஒப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு பாடல்களிலும் உள்ள வரிகள், பாடிய விதம், ஆடல்கள் தொடர்பில் மாணவர்களின் பாடத்திட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டே வேடனின் பாடல் பட்டப்படிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. வேடனின் பாடல் பல்கலைப் பட்டப்படிப்பில் இணைக்கப்பட்டுள்ளமை சாதி,மதம் உள்ளிட்ட சமூக வேற்றுமைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடப்புத்தகத்தில் ஈழத்து வேடனின் பாடலை இணைத்த கேளரளப் பல்கலை. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகரான வேடன் எனப்படும் ஹிரந்தாஸ் முரளியின் பாடலொன்று, கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் இந்தியாவின் கேரளாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேடன், மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் பிரபலமான பாடகராக இருந்து வருகின்றார். இவரின் பாடல்கள் ஈழத்தில் இடம்பெற்ற யுத்தம் சார்ந்ததாகவும், சாதி, மதம் உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதாக இடம்பெற்று வருவதால் அனைவரிடத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் வேடன். இந்நிலையில், வேடனின் பாடல்களில் ஒன்றான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ – Bhoomi Njan Vazhunidam’ எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.குறித்த பாடத்திட்டத்தில், பிரபல பொப் பாடகர் மறைந்த மைக்கல் ஜெக்சனின் ‘They Don’t Care About Us’ எனும் பாடலுடன் வேடனின் பாடல் ஒப்பிடப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களிலும் உள்ள வரிகள், பாடிய விதம், ஆடல்கள் தொடர்பில் மாணவர்களின் பாடத்திட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டே வேடனின் பாடல் பட்டப்படிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. வேடனின் பாடல் பல்கலைப் பட்டப்படிப்பில் இணைக்கப்பட்டுள்ளமை சாதி,மதம் உள்ளிட்ட சமூக வேற்றுமைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.