பிரெஞ்ச் ஓபன் பட்டம் (2017) வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.
ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ஏலத்தில் 157,333.20 அமெரிக்க டொலருக்கு விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட் இதுவாக சாதனை படைத்துள்ளது.
பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற 2017 ஆம் ஆண்டு சீசனில் மட்டும் மொத்தம் 24 போட்டிகளில் நடால் இந்த ராக்கெட்டை பயன்படுத்தி இருந்தார். இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் நடால் பயன்படுத்திய ராக்கெட் 139,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையானது.
2017 பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரிங்காவை 6-2, 6-3, 6-1 நேர் செட் கணக்கில் நடால் வென்றார். அது அவரது 10ஆவது பிரெஞ்ச் ஓபன் பட்டமாக அமைந்தது. அதற்கு பின்னர் மேலும் 4 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றார். நடால் மொத்தம் 14 முறை பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனை படைத்த நடாலின் டென்னிஸ் ராக்கெட். பிரெஞ்ச் ஓபன் பட்டம் (2017) வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ஏலத்தில் 157,333.20 அமெரிக்க டொலருக்கு விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட் இதுவாக சாதனை படைத்துள்ளது.பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற 2017 ஆம் ஆண்டு சீசனில் மட்டும் மொத்தம் 24 போட்டிகளில் நடால் இந்த ராக்கெட்டை பயன்படுத்தி இருந்தார். இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் நடால் பயன்படுத்திய ராக்கெட் 139,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையானது.2017 பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரிங்காவை 6-2, 6-3, 6-1 நேர் செட் கணக்கில் நடால் வென்றார். அது அவரது 10ஆவது பிரெஞ்ச் ஓபன் பட்டமாக அமைந்தது. அதற்கு பின்னர் மேலும் 4 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றார். நடால் மொத்தம் 14 முறை பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.