யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.
விடயம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இந் நிலையில், நாளை(21) முதல் 15 நாட்களுக்கு செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் என்பு கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டன.
இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.விடயம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கியுள்ளது.இந் நிலையில், நாளை(21) முதல் 15 நாட்களுக்கு செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதேவேளை, மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் என்பு கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டன.இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.