மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது.
இக் கிராமத்தில் பல பகுதிகளில் இவ்வாறான காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் தாங்கள் வாழ்வாதாரமான தோட்ட செய்கையை அழிப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகளினால் தொடர்ச்சியாக இவ்வாறான நிலை ஏற்படுமாயின் இக்கிராமத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பரப்புக் கடந்தான் கிராமத்திற்கு ஒரு யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னாரில் காட்டு யானைகளின் அட்டகாசம்; தென்னை மரங்கள் அழிப்பு மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது.இக் கிராமத்தில் பல பகுதிகளில் இவ்வாறான காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும் தாங்கள் வாழ்வாதாரமான தோட்ட செய்கையை அழிப்பதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். காட்டு யானைகளினால் தொடர்ச்சியாக இவ்வாறான நிலை ஏற்படுமாயின் இக்கிராமத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பரப்புக் கடந்தான் கிராமத்திற்கு ஒரு யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.