இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், இலங்கையின் வான், நிலம் மற்றும் கடற்பரப்புகளை எந்வொரு நாடும் பயன்படுத்த இடமளிக்க போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா - பாக்கிஸ்தானுக்கிடையிலான மோதல் நிலைமை தொடர்பில் இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட கூடிய புவிசார் அரசியல் மோதல்களில் தலையிடப் போவதில்லை. அணிசேரா கொள்கைக்கமையை தொடர்ந்தும் பின்பற்றி நாட்டின் இறையான்மையைப் பாதுகாப்பதில் முழு அளவில் ஈடுப்படுவதாகவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுப்படுத்துகையில்,
உலகளாவிய பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கை அனுமதிக்காது. பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் போவதுமில்லை.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவோம். பிராந்தியத்தின் நிலையான அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்பு என்பன எமக்கு முக்கியமாகும்.
பிராந்திய நாடுகள் என்ற ரீதியில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்துள்ளன.
இரு நாடுகளுடனுமே சிறந்த இராஜதந்திர உறவுகள் உள்ளன. இருப்பினும் ஒரு நாட்டுக்கு எதிராக இலங்கையின் நிலப் பரப்பு, கடல் மற்றும் வான் பரப்பினைப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என்றார்.
இந்தியா - பாக்கிஸ்தான் மோதல்; இலங்கை வான் பரப்பை பயன்படுத்த இடமளியோம் - அரசாங்கம் அறிவிப்பு இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், இலங்கையின் வான், நிலம் மற்றும் கடற்பரப்புகளை எந்வொரு நாடும் பயன்படுத்த இடமளிக்க போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியா - பாக்கிஸ்தானுக்கிடையிலான மோதல் நிலைமை தொடர்பில் இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட கூடிய புவிசார் அரசியல் மோதல்களில் தலையிடப் போவதில்லை. அணிசேரா கொள்கைக்கமையை தொடர்ந்தும் பின்பற்றி நாட்டின் இறையான்மையைப் பாதுகாப்பதில் முழு அளவில் ஈடுப்படுவதாகவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.இது குறித்து அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுப்படுத்துகையில், உலகளாவிய பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கை அனுமதிக்காது. பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் போவதுமில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவோம். பிராந்தியத்தின் நிலையான அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்பு என்பன எமக்கு முக்கியமாகும். பிராந்திய நாடுகள் என்ற ரீதியில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்துள்ளன. இரு நாடுகளுடனுமே சிறந்த இராஜதந்திர உறவுகள் உள்ளன. இருப்பினும் ஒரு நாட்டுக்கு எதிராக இலங்கையின் நிலப் பரப்பு, கடல் மற்றும் வான் பரப்பினைப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என்றார்.