• Aug 10 2025

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

Chithra / Aug 10th 2025, 12:57 pm
image


மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு, (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்தனர். 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 


மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாக மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல் மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு, (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாக மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement