• Aug 10 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு!

Thansita / Aug 10th 2025, 3:45 pm
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளுடன் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை இன்றையதினம் நுவரெலியா நகரில் உள்ள கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள்.

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்தியாஞ்சல் பாண்டே மற்றும் இந்திய இணை உயர்ஸ்தானிகர் (கண்டி) வீ.எஸ். சரண்யா ஆகியோரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடினர்

.

இந்த சந்திப்பில், இருநாட்டு நட்புறவு, தொழிலாளர் நலன், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் போது இ.தொ.கா சார்பில் நிதிசெயலாளரும், தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாநகர சபை பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர் சின்னையா பாலகிருஸ்னன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்திய உயர் ஸ்தானியரிடம் மலையக மக்களின் எதிர்கால வேலை திட்டம் மற்றும் வேலை வாய்ப்பு 10000 வீடுகள் கட்டுமானம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளுடன் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை இன்றையதினம் நுவரெலியா நகரில் உள்ள கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள்.இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்தியாஞ்சல் பாண்டே மற்றும் இந்திய இணை உயர்ஸ்தானிகர் (கண்டி) வீ.எஸ். சரண்யா ஆகியோரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.இந்த சந்திப்பில், இருநாட்டு நட்புறவு, தொழிலாளர் நலன், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதன் போது இ.தொ.கா சார்பில் நிதிசெயலாளரும், தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாநகர சபை பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர் சின்னையா பாலகிருஸ்னன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.மேலும் இந்திய உயர் ஸ்தானியரிடம் மலையக மக்களின் எதிர்கால வேலை திட்டம் மற்றும் வேலை வாய்ப்பு 10000 வீடுகள் கட்டுமானம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்

Advertisement

Advertisement

Advertisement