• Aug 10 2025

நாட்டின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர் விநியோகத் தடை

Chithra / Aug 10th 2025, 11:02 am
image


கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

குழாய் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. 

இதற்கமைய நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மவிட்டிகம்மன மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர் விநியோகத் தடை கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. குழாய் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. இதற்கமைய நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, ஊராபொல, திக்கந்த, மவிட்டிகம்மன மாஇம்புல, மாதலான, ஹக்கல்ல, அலவல, கலல்பிட்டி, எல்லமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement