• Aug 10 2025

சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திரியாய் கிராமத்தில் போராட்டம்

Chithra / Aug 10th 2025, 12:45 pm
image


வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தி இன்று (10) திருகோணமலை திரியாய் கிராமத்தில் போராட்டம்  இடம்பெற்றது. 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு  இன்று (10) திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது. 

பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள் தொடர்ந்தும் நில அபகரிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இன்றைய தினம் கூடிய மக்கள், ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர்.

இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திரியாய் கிராமத்தில் போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தி இன்று (10) திருகோணமலை திரியாய் கிராமத்தில் போராட்டம்  இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு  இன்று (10) திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் இடம்பெற்றது. பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள் தொடர்ந்தும் நில அபகரிப்புக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இன்றைய தினம் கூடிய மக்கள், ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர்.இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement