• Aug 10 2025

கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி; 45 வகையான சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

Chithra / Aug 10th 2025, 3:49 pm
image


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனித புதைகுழி குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த புதைகுழி 1994-1996 காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறுகிறது.

புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்குத் துணைபுரியுமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்பதை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நம்புகிறது. 

புதைகுழி அகழ்வின் போது  கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில்  பொதுமக்கள் தகவல்களையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்த கொள்ள முடியும்.

எண்.3174 உள்ளாடைகள் எண்.3104 காற்சட்டை,1564 உள்ளாடை ,1018 உள்ளாடைகள் ,எண் 1204 கால்சட்டை


X76  உள்ளாடை ,த.வி.பு.இ.1333 நாய் களுத்துப்பட்டி ,10546 முழு நீளக்காற் சட்டை, எண் 10555 உள்ளாடை ,எண் 1781 உள்ளாடை ,எண்.302 பிரேசியர் ,த.வி. பு .இ.1302, எண் 1124 உள்ளாடைகள் , எண்1124 காற்சட்டை மற்றும் உள்ளாடை ,எண் 777 உள்ளாடை ,எண்499 உள்ளாடைகள்

எண் 0043-நாய் களுத்துப்பட்டி ,குருதி O+, எண்306 உள்ளாடை ,உ101 77 ,X95 உள்ளாடை, இ 474 காற்சட்டை, இ 701 உள்ளாடைகள் ,இ225 உள்ளாடைகள், த.வி.பு.இ.225 ,இ 458 உள்ளாடைகள் ,ஈ 17 உள்ளாடை ,இ 453  மேற் சட்டை

எ 1778 பிராசியர்,எண் 760 உள்ளாடைகள், எ 599 உலோக வளையல். உ599 பிராசியர், எண்1907 ரீசேட், எண் 7907 பிராசியர்,த.வி.பு .ஒ நாய் கழுத்துப் பட்டி, எண் 3504 3503 உள்ளாடை ,  எண்  3471  மேற் சட்டை மற்றும் ஓ 3035 காற்சட்டை என்பனவற்றை அடையாளப்படுத்த உதவவும்.

வழங்கும்  தகவலின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பயிற்சி பெற்ற அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்ட சாத்தியமான உறவினர்கள், சாத்தியமான சாட்சிகள் தொடர்பில்  நேர்காணல் செய்வார்கள். 

அலுவலக சட்டத்தின் கீழ், இரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கும்  சாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்  OMP கடமைப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல்கள் மூலம் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய  சாத்தியக்கூறுகள் குறித்தும் OMP அறிந்திருக்கிறது. இதனால் உளவியல் ரீதியான சேவைகளும் வழங்கப்படும்.

இது தொடர்பான தகவல்களை இலக்கம்  40 மூன்றாம் மாடி புத்கமுவ வீதி ராஜகிரிய, இல 54 தர்மாராம வீதி கோட்டை மாத்தறை, துணை அலுவலகம் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு, கோட்டை வீதி பழைய மாவட்ட செயலக கட்டிடம் மட்டக்களப்பு, மூன்றாம் மாடி புதிய கட்டிடம் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம், மாவட்ட செயலகம் மன்னர், A9 வீதி நீதிமன்றம் அருகாமை கிளிநொச்சி ஆகிய  அலுவலகங்களில்  05.08.2025 ஆந் திகதி முதல் 04.09.2025 ஆந் திகதி வரையில் வருகை தந்து தகவல்களை வழங்குமாறு அல்லது ராஜகிரிய 0112861431 ,மாத்தறை 0412244684, முல்லைத்தீவு 0212286030, மட்டக்களப்பு 0652222229 , யாழ்ப்பாணம் 0212219400 மற்றும் மன்னார் 0232223929 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி; 45 வகையான சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனித புதைகுழி குறித்த விசாரணை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றது.முதற்கட்ட தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த புதைகுழி 1994-1996 காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறுகிறது.புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்து தீர்மானம் மேற்கொள்வதற்குத் துணைபுரியுமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்பதை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நம்புகிறது. புதைகுழி அகழ்வின் போது  கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில்  பொதுமக்கள் தகவல்களையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்த கொள்ள முடியும்.எண்.3174 உள்ளாடைகள் எண்.3104 காற்சட்டை,1564 உள்ளாடை ,1018 உள்ளாடைகள் ,எண் 1204 கால்சட்டைX76  உள்ளாடை ,த.வி.பு.இ.1333 நாய் களுத்துப்பட்டி ,10546 முழு நீளக்காற் சட்டை, எண் 10555 உள்ளாடை ,எண் 1781 உள்ளாடை ,எண்.302 பிரேசியர் ,த.வி. பு .இ.1302, எண் 1124 உள்ளாடைகள் , எண்1124 காற்சட்டை மற்றும் உள்ளாடை ,எண் 777 உள்ளாடை ,எண்499 உள்ளாடைகள்எண் 0043-நாய் களுத்துப்பட்டி ,குருதி O+, எண்306 உள்ளாடை ,உ101 77 ,X95 உள்ளாடை, இ 474 காற்சட்டை, இ 701 உள்ளாடைகள் ,இ225 உள்ளாடைகள், த.வி.பு.இ.225 ,இ 458 உள்ளாடைகள் ,ஈ 17 உள்ளாடை ,இ 453  மேற் சட்டைஎ 1778 பிராசியர்,எண் 760 உள்ளாடைகள், எ 599 உலோக வளையல். உ599 பிராசியர், எண்1907 ரீசேட், எண் 7907 பிராசியர்,த.வி.பு .ஒ நாய் கழுத்துப் பட்டி, எண் 3504 3503 உள்ளாடை ,  எண்  3471  மேற் சட்டை மற்றும் ஓ 3035 காற்சட்டை என்பனவற்றை அடையாளப்படுத்த உதவவும்.வழங்கும்  தகவலின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பயிற்சி பெற்ற அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்ட சாத்தியமான உறவினர்கள், சாத்தியமான சாட்சிகள் தொடர்பில்  நேர்காணல் செய்வார்கள். அலுவலக சட்டத்தின் கீழ், இரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கும்  சாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்  OMP கடமைப்பட்டுள்ளது.இந்த நேர்காணல்கள் மூலம் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய  சாத்தியக்கூறுகள் குறித்தும் OMP அறிந்திருக்கிறது. இதனால் உளவியல் ரீதியான சேவைகளும் வழங்கப்படும்.இது தொடர்பான தகவல்களை இலக்கம்  40 மூன்றாம் மாடி புத்கமுவ வீதி ராஜகிரிய, இல 54 தர்மாராம வீதி கோட்டை மாத்தறை, துணை அலுவலகம் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு, கோட்டை வீதி பழைய மாவட்ட செயலக கட்டிடம் மட்டக்களப்பு, மூன்றாம் மாடி புதிய கட்டிடம் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம், மாவட்ட செயலகம் மன்னர், A9 வீதி நீதிமன்றம் அருகாமை கிளிநொச்சி ஆகிய  அலுவலகங்களில்  05.08.2025 ஆந் திகதி முதல் 04.09.2025 ஆந் திகதி வரையில் வருகை தந்து தகவல்களை வழங்குமாறு அல்லது ராஜகிரிய 0112861431 ,மாத்தறை 0412244684, முல்லைத்தீவு 0212286030, மட்டக்களப்பு 0652222229 , யாழ்ப்பாணம் 0212219400 மற்றும் மன்னார் 0232223929 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement