• Jul 09 2025

இடிந்து விழுந்த பாலம்; மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் குடைசாய்ந்து விபத்து

Chithra / Jul 8th 2025, 8:06 am
image

 

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்   ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை,  டிப்பருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த டிப்பர் சூரியபுரயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், 

நிறுவனத்திற்காக மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் போலிஸார் தெரிவித்தனர்.

வாய்க்காலைக் கடக்க முற்பட்டபோது, பழைய பாலம் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்ததால் டிப்பர் லொறி நிலைதடுமாறி குடைசாய்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சூரியபுர போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இடிந்து விழுந்த பாலம்; மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் குடைசாய்ந்து விபத்து  கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்   ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது.இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை,  டிப்பருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த டிப்பர் சூரியபுரயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், நிறுவனத்திற்காக மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் போலிஸார் தெரிவித்தனர்.வாய்க்காலைக் கடக்க முற்பட்டபோது, பழைய பாலம் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்ததால் டிப்பர் லொறி நிலைதடுமாறி குடைசாய்ந்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்து சூரியபுர போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement