திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் முதலைகள் நிறைந்த நீர் குழிக்குள் குதித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று இரவு மில்லனிய பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருட்களை திருடிக் கொண்டிருக்கும்போது, அதனை கடை உரிமையாளர் கண்டு கூச்சல் இட்டுள்ளார்.
அந்த நேரத்தில் சந்தேக நபர் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
காயமடைந்த கடை உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மில்லனிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர் .
அதன் பின்னர் சந்தேக நபரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய போலீஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கால் இறுக்கி, மோட்டார் சைக்கிளை கவிழ்த்துள்ளார்.
பின்பு, அங்கிருந்த 'கொஸ் கஹா வல' என்ற முதலைகள் நிறைந்த நீர்த்தேக்கத்திற்குள் சந்தேக நபர் குதித்துள்ளார்.
அங்கு விரைந்து வந்த உள்ளூர் வாசிகள் மற்றும் மில்லனிய போலீஸ் அதிகாரிகளால் சந்தேக நபர் மீட்கப்பட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் சந்தேக நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மில்லினிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முதலைகள் நிறைந்த நீர் குழிக்குள் குதித்த சந்தேகநபர் உயிர் தப்பிய பொலிஸார் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் முதலைகள் நிறைந்த நீர் குழிக்குள் குதித்துள்ளார்.குறித்த சந்தேக நபர் நேற்று இரவு மில்லனிய பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருட்களை திருடிக் கொண்டிருக்கும்போது, அதனை கடை உரிமையாளர் கண்டு கூச்சல் இட்டுள்ளார். அந்த நேரத்தில் சந்தேக நபர் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த கடை உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று மில்லனிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர் .அதன் பின்னர் சந்தேக நபரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய போலீஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கால் இறுக்கி, மோட்டார் சைக்கிளை கவிழ்த்துள்ளார்.பின்பு, அங்கிருந்த 'கொஸ் கஹா வல' என்ற முதலைகள் நிறைந்த நீர்த்தேக்கத்திற்குள் சந்தேக நபர் குதித்துள்ளார். அங்கு விரைந்து வந்த உள்ளூர் வாசிகள் மற்றும் மில்லனிய போலீஸ் அதிகாரிகளால் சந்தேக நபர் மீட்கப்பட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தில் சந்தேக நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை மில்லினிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.