• Aug 28 2025

எங்களுக்கான நீதி சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக கிடைக்க வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை

Aathira / Aug 28th 2025, 7:38 pm
image

வலிந்து  காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, சர்வதேச  நீதிப் பொறி முறையின்  ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30ஆம் திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்று  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில்  வடக்கு கிழக்கு சமூக ஒருங்கிணைப்பாளர்களான அன்புமணி லவகுசராசா மற்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் திருகோணமலை மாவட்ட சங்கத் தலைவி தேவி  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

வடக்கு கிழக்கில் திட்டமிட்டு  இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட  எமது மக்களுக்கான நீதிக்காகவும்,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?  எங்கு இருக்கின்றார்கள்?  என்ற நீதியையும் உண்மையையும்  சர்வதேசத்திற்கு உரத்த குரலில்  ஒலிப்பதற்காகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. 

இலங்கையில் காலம் காலமாக ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்  தொடர்பில் எந்த விதமான நடவடிக்கைகளையும் முன் எடுக்கவில்லை.


நீதிக்காக போராடிய 300க்கும் மேற்பட்ட தாய்மார்கள்  இறந்துள்ள சூழ்நிலை உண்மையிலே எங்களுக்கு வேதனையை தருகின்றது. 

ஆகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும்,  இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்குமான குரலாக நாங்கள் சர்வதேச   சுயதீன நீதி பொறிமுறையின் ஊடாக எங்களுக்கான  நீதியை வேண்டி நிற்கின்றோம். 

30-ஆம் திகதி வடக்கு கிழக்கில்  இடம்பெறவுள்ள இந்த பாரிய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு  அனைவரும் கலந்து கொண்டு,

எங்களுக்கான நீதியை சர்வதேச  நீதிப் பொறி முறையின்  ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்த வேண்டும்.

 எனவே இந்த பேரணிக்கு அனைத்து உறவுகளும், அரசியல்வாதிகளும்,  மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,  பாதிக்கப்பட்ட சமூகமும்,  சிவில் சமூகம் என  அனைவரும் எங்களுடன் இணைந்து  எங்களுக்கான இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு  மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

எங்களுக்கான நீதி சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக கிடைக்க வேண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை வலிந்து  காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, சர்வதேச  நீதிப் பொறி முறையின்  ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றாக கோரிக்கை விடுத்துள்ளனர்.வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30ஆம் திகதியன்று வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்று  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்  வடக்கு கிழக்கு சமூக ஒருங்கிணைப்பாளர்களான அன்புமணி லவகுசராசா மற்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் திருகோணமலை மாவட்ட சங்கத் தலைவி தேவி  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,வடக்கு கிழக்கில் திட்டமிட்டு  இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட  எமது மக்களுக்கான நீதிக்காகவும்,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளுக்கு என்ன நேர்ந்தது  எங்கு இருக்கின்றார்கள்  என்ற நீதியையும் உண்மையையும்  சர்வதேசத்திற்கு உரத்த குரலில்  ஒலிப்பதற்காகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இலங்கையில் காலம் காலமாக ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்  தொடர்பில் எந்த விதமான நடவடிக்கைகளையும் முன் எடுக்கவில்லை.நீதிக்காக போராடிய 300க்கும் மேற்பட்ட தாய்மார்கள்  இறந்துள்ள சூழ்நிலை உண்மையிலே எங்களுக்கு வேதனையை தருகின்றது. ஆகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும்,  இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்குமான குரலாக நாங்கள் சர்வதேச   சுயதீன நீதி பொறிமுறையின் ஊடாக எங்களுக்கான  நீதியை வேண்டி நிற்கின்றோம். 30-ஆம் திகதி வடக்கு கிழக்கில்  இடம்பெறவுள்ள இந்த பாரிய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு  அனைவரும் கலந்து கொண்டு,எங்களுக்கான நீதியை சர்வதேச  நீதிப் பொறி முறையின்  ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்த வேண்டும். எனவே இந்த பேரணிக்கு அனைத்து உறவுகளும், அரசியல்வாதிகளும்,  மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,  பாதிக்கப்பட்ட சமூகமும்,  சிவில் சமூகம் என  அனைவரும் எங்களுடன் இணைந்து  எங்களுக்கான இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு  மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement