• Aug 28 2025

வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய சிறுவன்; வெளியான அதிர்ச்சி காரணம்

Chithra / Aug 28th 2025, 9:05 am
image

நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில் சிறுவன் ஒருவர் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அயலவர்களுக்கும் இந்த சிறுவனின் குடும்பத்தாருக்கும் இடையேயான முன்பகை காரணமாக, சிறுவன் இந்த வளர்ப்பு நாயைத் தாக்கி ஆற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, 15 வயதுடைய குறித்த சிறுவன்  நானுஒயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் வைத்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருகங்களுக்கு எதிரான சித்திரவதை தடுப்புச் சட்டத்திற்கமைய, இந்த சிறுவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய சிறுவன்; வெளியான அதிர்ச்சி காரணம் நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில் சிறுவன் ஒருவர் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.அயலவர்களுக்கும் இந்த சிறுவனின் குடும்பத்தாருக்கும் இடையேயான முன்பகை காரணமாக, சிறுவன் இந்த வளர்ப்பு நாயைத் தாக்கி ஆற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக, 15 வயதுடைய குறித்த சிறுவன்  நானுஒயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் வைத்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிருகங்களுக்கு எதிரான சித்திரவதை தடுப்புச் சட்டத்திற்கமைய, இந்த சிறுவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement