• Aug 28 2025

காணி விடுவிப்பு தொடர்பில் தீர்மானிக்க அமைச்சுக்கள் மட்டக் குழு

Chithra / Aug 27th 2025, 8:51 pm
image

 

காணி விடுவிப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சுக்கள் மட்ட  குழுவொன்றை ஸ்தாபிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

இதனூடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைக்கான காணிகளை வழங்குவதற்கும், சில பகுதிகளில் குடியேற்றத்துக்கான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதற்காக வனஜீவராசிகள் மற்றும் வனவள திணைக்களம், மகாவலி அதிகாரபை உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் கலந்துரையாடி, நிரந்தர குடியிருப்பு அமைத்தல், வர்த்தகம் மற்றும் விவசாயம் போன்ற நடவடிக்கைகளுக்கு காணிகளை வழங்கும் நோக்கில் இந்த அமைச்சுக்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு தொடர்பில் தீர்மானிக்க அமைச்சுக்கள் மட்டக் குழு  காணி விடுவிப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சுக்கள் மட்ட  குழுவொன்றை ஸ்தாபிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.இதனூடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைக்கான காணிகளை வழங்குவதற்கும், சில பகுதிகளில் குடியேற்றத்துக்கான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.இதற்காக வனஜீவராசிகள் மற்றும் வனவள திணைக்களம், மகாவலி அதிகாரபை உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் கலந்துரையாடி, நிரந்தர குடியிருப்பு அமைத்தல், வர்த்தகம் மற்றும் விவசாயம் போன்ற நடவடிக்கைகளுக்கு காணிகளை வழங்கும் நோக்கில் இந்த அமைச்சுக்களுக்கு இடையிலான குழுவொன்றை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement