கல்முனை - காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீர் தலைமையில் குறித்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது குருதி, குளுக்கோஸ், கொலஸ்ட்ரோல் பரிசோதனை, உடல் திணிவு சுட்டி பரிசோதனை மற்றும் குருதி அமுக்க பரிசோதனை போன்றன மேற்கொள்ளப்பட்டன.
கல்முனையில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை கல்முனை - காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீர் தலைமையில் குறித்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.இதன்போது குருதி, குளுக்கோஸ், கொலஸ்ட்ரோல் பரிசோதனை, உடல் திணிவு சுட்டி பரிசோதனை மற்றும் குருதி அமுக்க பரிசோதனை போன்றன மேற்கொள்ளப்பட்டன.