• Aug 29 2025

சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி!

shanuja / Aug 28th 2025, 10:04 pm
image

சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொனிப் பொருளில்சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.


மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகரினால் குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.


பிரதேசத்தில் வாழும் பெற்றோர்கள் சிலர் வெளிநாடு செல்வதால் தங்களது பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான பிரச்சாரத்துடன் இவ் பேரணி மருதநகர் மெதடிஸ்த திருச்சபையில் இருந்து ஆரம்பமானது.


பின்னர் விநாயகபுரம் வீதி வழியாக சென்று பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய முன்றலை வந்தடைந்தது.அங்கு கூடியிருந்த மக்களிடையே சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விசேட உரை ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்ட மாணவியால் நிகழ்த்தப்பட்டது.


பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறுபட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.


பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சிறுவயதில் விட்டு விட்டு வெளிநாடு செல்வதால் பிள்ளைகள் பல சவால்களுக்கு முகம் கொடுத்தல், ஆரம்ப கல்வி மறுக்கப்படுகிறது, இடை விலகல் ஏற்படுகிறது, பாதுகாப்பின்பின்மை ஏற்படுகிறது, சிறுவர் துஸ்பிரயோகம் புறக்கணிப்பு,கவனிப்பின்மையால் சுயத்தை இழக்க நேரிடல் என பல்வேறு பாதிப்புக்களை சிறுவர்கள் எதிர்நோக்குவதாக இதன்போது மக்களிடை எடுத்துக் கூறப்பட்டது.


பேரணியில் வடக்கு - கிழக்குத் திருமாவட்ட அவை செயலாளர் அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் இலங்கை மெதடிஸ்த திருட்சபை கிரான் அருட்திரு எனோசன் போதகர் மற்றும் சமூதாயம் சார் உத்தியோகத்தர் பங்குபற்றியருந்தனர்.

சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொனிப் பொருளில்சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி இன்று (28) முன்னெடுக்கப்பட்டது. மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகரினால் குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. பிரதேசத்தில் வாழும் பெற்றோர்கள் சிலர் வெளிநாடு செல்வதால் தங்களது பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான பிரச்சாரத்துடன் இவ் பேரணி மருதநகர் மெதடிஸ்த திருச்சபையில் இருந்து ஆரம்பமானது.பின்னர் விநாயகபுரம் வீதி வழியாக சென்று பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய முன்றலை வந்தடைந்தது.அங்கு கூடியிருந்த மக்களிடையே சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விசேட உரை ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்ட மாணவியால் நிகழ்த்தப்பட்டது.பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறுபட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சிறுவயதில் விட்டு விட்டு வெளிநாடு செல்வதால் பிள்ளைகள் பல சவால்களுக்கு முகம் கொடுத்தல், ஆரம்ப கல்வி மறுக்கப்படுகிறது, இடை விலகல் ஏற்படுகிறது, பாதுகாப்பின்பின்மை ஏற்படுகிறது, சிறுவர் துஸ்பிரயோகம் புறக்கணிப்பு,கவனிப்பின்மையால் சுயத்தை இழக்க நேரிடல் என பல்வேறு பாதிப்புக்களை சிறுவர்கள் எதிர்நோக்குவதாக இதன்போது மக்களிடை எடுத்துக் கூறப்பட்டது.பேரணியில் வடக்கு - கிழக்குத் திருமாவட்ட அவை செயலாளர் அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் இலங்கை மெதடிஸ்த திருட்சபை கிரான் அருட்திரு எனோசன் போதகர் மற்றும் சமூதாயம் சார் உத்தியோகத்தர் பங்குபற்றியருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement