Google Translate இல் AI தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு மொழிகளில் உரையாடும் வகையிலான புதிய திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கூகிள் மொழிபெயர்ப்பின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தில் மேலதிகமாக AI தொழில்நுட்பம் மூலம் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி மாதிரி கட்டமைப்பில் மாற்றங்கள், பயிற்சி, தரவுத்தொகுப்புகளில் இரைச்சல் மேலாண்மை மற்றும் பன்மொழி பரிமாற்றம் ஆகியவை இதில் அடங்கும் .
100 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான மேம்பட்ட மொழிபெயர்ப்பு தரத்திற்கு Google Translate இல் வழிவகுக்கப்பட்டுள்ளது.
இணைக்கப்பட்ட மொழிகளில் எளிதாக உரையாடும் திட்டம், புதிய மொழியை கற்றுக்கொள்ளும் திட்டம் என்பன காணப்படுகின்றன.
இந்த புதிய திட்டங்கள் மொழித்தடைகளை நீக்கி, தகவல் தொடர்பை எளிதாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெரியாத மொழியொன்றை மொழிபெயர்ப்புச் செய்வதற்கான இலகுவான வழிமுறையாக இதுவரைகாலமும் Google Translate முக்கிய பங்கை வகித்து வருகின்றது.
இந்த நிலையில் தற்போது மேலும் பல மொழிகள் இணைக்கப்பட்டு புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளமை பல வழிகளில் பலருக்கும் உதவும் எனலாம்.
Google Translate இல் AI தொழில்நுட்பங்கள்; 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் உரையாடலாம் Google Translate இல் AI தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு மொழிகளில் உரையாடும் வகையிலான புதிய திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கூகிள் மொழிபெயர்ப்பின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தில் மேலதிகமாக AI தொழில்நுட்பம் மூலம் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி மாதிரி கட்டமைப்பில் மாற்றங்கள், பயிற்சி, தரவுத்தொகுப்புகளில் இரைச்சல் மேலாண்மை மற்றும் பன்மொழி பரிமாற்றம் ஆகியவை இதில் அடங்கும் . 100 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான மேம்பட்ட மொழிபெயர்ப்பு தரத்திற்கு Google Translate இல் வழிவகுக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட மொழிகளில் எளிதாக உரையாடும் திட்டம், புதிய மொழியை கற்றுக்கொள்ளும் திட்டம் என்பன காணப்படுகின்றன. இந்த புதிய திட்டங்கள் மொழித்தடைகளை நீக்கி, தகவல் தொடர்பை எளிதாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெரியாத மொழியொன்றை மொழிபெயர்ப்புச் செய்வதற்கான இலகுவான வழிமுறையாக இதுவரைகாலமும் Google Translate முக்கிய பங்கை வகித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது மேலும் பல மொழிகள் இணைக்கப்பட்டு புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளமை பல வழிகளில் பலருக்கும் உதவும் எனலாம்.