• Oct 27 2026

கருத்தரங்கிற்குச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு!

Chithra / Oct 27th 2026, 11:32 am
image


கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஹொரண பகுதியில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவனின் சடலம் மொரட்டுவ, மாதங்காவத்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹொரண பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மியுரு நிம்சர என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கடந்த 25ஆம் திகதி ஹொரண பகுதியில் நடைபெறவிருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்ற மாணவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதனால் கவலையடைந்த பெற்றோர், தமது மகன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


இந்த நிலையில், மொரட்டுவ மாதங்காவத்த கடற்கரையில் சடலமொன்று காணப்படுவதாக பொதுமக்கள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன், அது காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 16 வயது மாணவனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், மாணவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலோ, அவரது மரணத்திற்கான காரணம் குறித்தோ பொலிஸார் இதுவரையில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்தரங்கிற்குச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹொரண பகுதியில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவனின் சடலம் மொரட்டுவ, மாதங்காவத்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹொரண பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மியுரு நிம்சர என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த 25ஆம் திகதி ஹொரண பகுதியில் நடைபெறவிருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்ற மாணவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் கவலையடைந்த பெற்றோர், தமது மகன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.இந்த நிலையில், மொரட்டுவ மாதங்காவத்த கடற்கரையில் சடலமொன்று காணப்படுவதாக பொதுமக்கள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன், அது காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 16 வயது மாணவனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், மாணவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலோ, அவரது மரணத்திற்கான காரணம் குறித்தோ பொலிஸார் இதுவரையில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement