மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நேற்று நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகப் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாகக் தரப்பால்கள் வழங்கிவைக்கப்பட்டது.
முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மாற்று ஒழுங்குகளும் செய்து வைக்கப்பட்டது
குறித்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசக்தி உறுப்பினர்களும் சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு உட்பட உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சாந்திபுரம், பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நேற்று நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகப் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.இதன்போது, சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.மேலும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாகக் தரப்பால்கள் வழங்கிவைக்கப்பட்டது.முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மாற்று ஒழுங்குகளும் செய்து வைக்கப்பட்டது குறித்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசக்தி உறுப்பினர்களும் சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு உட்பட உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.