• Oct 25 2026

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026

Ziya / Oct 24th 2026, 5:17 pm
image

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்டச் செயலகமும் இணைந்து, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 இன்று (23) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டப் பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுநிலை அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். 


கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.


மாவட்டச் செயலக நுழைவாயிலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்தில் ஒயிலாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், சுளகு நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரியக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.


தொடர்ந்து நடைபெற்ற அரங்கு நிகழ்வுகளில் காலிங்க நர்த்தனம், பாரம்பரிய கூத்திசைப் பாடல்கள், வீரக் குழுநடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேறின. மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருதும், இளம் கலைஞர்களுக்கு “இளங்கலைஞர்” விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


இதன்போது, யாழ்ப்பாணத்தின் நாட்டார் வழக்காறுகளையும் சமூக அறிவியல் ஆய்வுகளையும் உள்ளடக்கிய “யாழ்ப்பாணம் 05 – நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் தொடர்பான ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் நிகழ்த்தினார்.


மேலும், மாவட்ட மட்டக் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கவிஞர் சோ. பத்மநாதன் உள்ளிட்ட கலைத்துறையினரும் கௌரவிக்கப்பட்டனர்.


தமிழர் பாரம்பரியத்தையும் இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் வகையில் தென்னோலை, மூங்கில், பனை ஓலை உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால் அரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், அரச அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்டச் செயலகமும் இணைந்து, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 இன்று (23) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டப் பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுநிலை அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.மாவட்டச் செயலக நுழைவாயிலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்தில் ஒயிலாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், சுளகு நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரியக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.தொடர்ந்து நடைபெற்ற அரங்கு நிகழ்வுகளில் காலிங்க நர்த்தனம், பாரம்பரிய கூத்திசைப் பாடல்கள், வீரக் குழுநடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேறின. மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருதும், இளம் கலைஞர்களுக்கு “இளங்கலைஞர்” விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது, யாழ்ப்பாணத்தின் நாட்டார் வழக்காறுகளையும் சமூக அறிவியல் ஆய்வுகளையும் உள்ளடக்கிய “யாழ்ப்பாணம் 05 – நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் தொடர்பான ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் நிகழ்த்தினார்.மேலும், மாவட்ட மட்டக் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கவிஞர் சோ. பத்மநாதன் உள்ளிட்ட கலைத்துறையினரும் கௌரவிக்கப்பட்டனர்.தமிழர் பாரம்பரியத்தையும் இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் வகையில் தென்னோலை, மூங்கில், பனை ஓலை உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால் அரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், அரச அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement