இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது சினோபெக் நிறுவனமும் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, சினோபெக் நிறுவனம் 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதுவரை 475 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை தற்போது 495 ரூபாவாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே லங்கா ஐஓசி நிறுவனம் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை 495 ரூபாவாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது சினோபெக் நிறுவனமும் அதே விலையை நிர்ணயித்துள்ளது.
லங்கா ஐஓசியை தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் எடுத்த முடிவு எரிபொருள் விலையில் திடீர் மாற்றம் இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியிருந்த நிலையில், தற்போது சினோபெக் நிறுவனமும் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.இதன்படி, சினோபெக் நிறுவனம் 95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.இதுவரை 475 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை தற்போது 495 ரூபாவாக உயர்ந்துள்ளது.ஏற்கனவே லங்கா ஐஓசி நிறுவனம் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை 495 ரூபாவாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது சினோபெக் நிறுவனமும் அதே விலையை நிர்ணயித்துள்ளது.