• Oct 27 2026

மன்னாரில் நள்ளிரவில் பயங்கரம்! உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்த கூரைகள் - நடந்தது என்ன?

Chithra / Oct 26th 2026, 4:22 pm
image


மன்னாரில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடுமையான இடி மின்னல் தாக்கத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.


மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் விழுந்துள்ளன.


மேலும், வீடுகளிலிருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதுடன், வீடுகள் மற்றும் உடைமைகளுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.


இந்த அனர்த்தத்தில் மொத்தமாக 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மன்னாரில் நள்ளிரவில் பயங்கரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்த கூரைகள் - நடந்தது என்ன மன்னாரில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடுமையான இடி மின்னல் தாக்கத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதன்போது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் விழுந்துள்ளன.மேலும், வீடுகளிலிருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதுடன், வீடுகள் மற்றும் உடைமைகளுக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தத்தில் மொத்தமாக 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement