• Aug 02 2025

மோனாலிசா ஓவியமாக தன்னை மாற்றிய மாணவன்; கிண்ணியா பாடசாலையில் வியத்தகு கண்காட்சி!

shanuja / Jul 31st 2025, 2:55 pm
image

கிண்ணியா பாடசாலையொன்றில் இடம்பெற்ற கண்காட்சியில்  காட்சிப்படுத்தப்பட்ட மோனாலிசா ஓவியத்தில் மோனாலிசாவின் முகத்திற்குப் பதிலாக தனது முகத்தை வைத்து ஓவியமாக நின்றுள்ளார். 

 

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சி, கடந்த 3 நாள்களாக இடம்பெற்ற நிலையில் இன்றுடன் இறுதிக் கண்காட்சி (31) நிறைவடைந்தது.


கடந்த மூன்று தினங்களாக, இடம்பெற்ற இந்த கண்காட்சியில் மாணவர்களின் சுய கண்டுபிடிப்புகள், பல்வர்ண ஓவியங்கள், விஞ்ஞானம் மற்றும் கணிதம் சார்ந்த செய்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.


இந்த கண்காட்சியானது தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புக்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை ஏனைய பாடசாலை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன. 


குறித்த கண்காட்சியிலேயே மாணவன் ஒருவர் மோனாலிசா ஓவியம் போல தன்னைக் காட்சிப்படுத்தினார். மாணவன் மோனாலிசா ஓவியமாக நின்ற காட்சி பார்ப்பவர்களைக் கவர்ந்துள்ளது. 


இவ்வாறான மாணவர்களின் தனித்திறமை சமூகத்தில் அறிவு பரிமாற்றத்தை ஊக்குவித்து, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை முன்னெடுக்க பாடசாலை சமூகத்துக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. 


கடந்த மூன்று தினங்கள் இடம்பெற்ற கண்காட்சிக்கு வருகை தந்த ஏனைய பாடசாலைகளுக்கும், பொது மக்களுக்கும் , கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்துக்கும், பெற்றோர்களுக்கும்  பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.முபாரக் நன்றிகளைத் தெரிவித்தார். 


குறித்த கண்காட்சியை 15 க்கும் மேற்பட்ட பாடசாலைகளும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களும் பார்வையிட்டு தங்களுடைய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். 


மாணவர்களின் வியத்தகு கண்காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளதோடு எதிர்காலத்தில் வரும் மாணவ சமுதாயத்தின் திறமையை வெளிக்கொணர ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றது எனலாம்.

மோனாலிசா ஓவியமாக தன்னை மாற்றிய மாணவன்; கிண்ணியா பாடசாலையில் வியத்தகு கண்காட்சி கிண்ணியா பாடசாலையொன்றில் இடம்பெற்ற கண்காட்சியில்  காட்சிப்படுத்தப்பட்ட மோனாலிசா ஓவியத்தில் மோனாலிசாவின் முகத்திற்குப் பதிலாக தனது முகத்தை வைத்து ஓவியமாக நின்றுள்ளார்.  கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்காட்சி, கடந்த 3 நாள்களாக இடம்பெற்ற நிலையில் இன்றுடன் இறுதிக் கண்காட்சி (31) நிறைவடைந்தது.கடந்த மூன்று தினங்களாக, இடம்பெற்ற இந்த கண்காட்சியில் மாணவர்களின் சுய கண்டுபிடிப்புகள், பல்வர்ண ஓவியங்கள், விஞ்ஞானம் மற்றும் கணிதம் சார்ந்த செய்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்த கண்காட்சியானது தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புக்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை ஏனைய பாடசாலை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்டன. குறித்த கண்காட்சியிலேயே மாணவன் ஒருவர் மோனாலிசா ஓவியம் போல தன்னைக் காட்சிப்படுத்தினார். மாணவன் மோனாலிசா ஓவியமாக நின்ற காட்சி பார்ப்பவர்களைக் கவர்ந்துள்ளது. இவ்வாறான மாணவர்களின் தனித்திறமை சமூகத்தில் அறிவு பரிமாற்றத்தை ஊக்குவித்து, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை முன்னெடுக்க பாடசாலை சமூகத்துக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. கடந்த மூன்று தினங்கள் இடம்பெற்ற கண்காட்சிக்கு வருகை தந்த ஏனைய பாடசாலைகளுக்கும், பொது மக்களுக்கும் , கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்துக்கும், பெற்றோர்களுக்கும்  பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.முபாரக் நன்றிகளைத் தெரிவித்தார். குறித்த கண்காட்சியை 15 க்கும் மேற்பட்ட பாடசாலைகளும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களும் பார்வையிட்டு தங்களுடைய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். மாணவர்களின் வியத்தகு கண்காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளதோடு எதிர்காலத்தில் வரும் மாணவ சமுதாயத்தின் திறமையை வெளிக்கொணர ஓர் எடுத்துக்காட்டாக அமைகின்றது எனலாம்.

Advertisement

Advertisement

Advertisement