ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.
ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (04) நடைபெற்றது.
இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் இலங்கை தேசிய ரக்பி அணி 21-29 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதனால், 2027 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரக்பி உலகக் கிண்ணத்திற்கு, ஆசியப் பிரிவிலிருந்து நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது தோல்வியால் இலங்கை அணி சாம்பியன்ஷிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது முதல் தரவரிசையிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலும் இலங்கை அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் வாய்ப்பை தவறவிட்ட இலங்கை அணி ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (04) நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் இலங்கை தேசிய ரக்பி அணி 21-29 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.இதனால், 2027 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரக்பி உலகக் கிண்ணத்திற்கு, ஆசியப் பிரிவிலிருந்து நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது தோல்வியால் இலங்கை அணி சாம்பியன்ஷிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது முதல் தரவரிசையிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலும் இலங்கை அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.