நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை காலை 8 மணி முதல் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வைத்தியர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து
இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், சகல அவசர சிகிச்சை சேவைகள்,மகப்பேறு வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,புற்றுநோய் வைத்தியசாலை (மஹரகம),சகல சிறுநீரக நோய் பிரிவு,
இராணுவ வைத்தியசாலை,தேசிய மனநல வைத்திய நிறுவனம் ஆகியவற்றின் சேவைகள் தடையின்றி இடம்பெறும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று பணிப் புறக்கணிப்பில் வைத்தியர்கள் நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை காலை 8 மணி முதல் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.வைத்தியர்களின் இடமாற்றத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படும் அவதான நிலை ஆகிய காரணிகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.எனினும், சகல அவசர சிகிச்சை சேவைகள்,மகப்பேறு வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,புற்றுநோய் வைத்தியசாலை (மஹரகம),சகல சிறுநீரக நோய் பிரிவு,இராணுவ வைத்தியசாலை,தேசிய மனநல வைத்திய நிறுவனம் ஆகியவற்றின் சேவைகள் தடையின்றி இடம்பெறும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.