பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து இரண்டு கருப்பு தலைக்கவசங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்தார்.
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி ஏதோ ஒரு பகுதியில் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி மீட்பு பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.பிலியந்தலை, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து இரண்டு கருப்பு தலைக்கவசங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதனிடையே இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்தார்.கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி ஏதோ ஒரு பகுதியில் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்