• Aug 25 2025

பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள்; சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு!

shanuja / Aug 24th 2025, 10:04 pm
image

ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர். அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடின் ரணிலின் கைதினை அரசியல் பழிவாங்கலாகவே  பார்க்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.


இன்று (24) மாலை மட்டக்களப்பு - போரதீவுபற்று பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 


தான் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பயங்கரவார தடுப்பு சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்ததாகவும் , அரசியல் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருப்பதன் காரணமாக வட கிழக்கு மக்களின் ,தேசிய இனப்பிரச்சினை , அபிவிருத்திகள் , மற்றும் யானைப்பிரச்சினை , உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையாள்வதில் சவால்கள் இருக்கின்றன.


அதற்காகவே நாம் சபை அதிகாரத்தினை கோரி நிற்கிறோம். அரசாங்கம் கூறுகிறது அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களில் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என தெரிவிக்கின்றது.


எதிர்வரும் 30 ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் , இதனை அகிம்சை ரீதியாக அனுஷ்ரிப்பதற்கு தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் - என்றார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள்; சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர். அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிடின் ரணிலின் கைதினை அரசியல் பழிவாங்கலாகவே  பார்க்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.இன்று (24) மாலை மட்டக்களப்பு - போரதீவுபற்று பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தான் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பயங்கரவார தடுப்பு சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்ததாகவும் , அரசியல் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருப்பதன் காரணமாக வட கிழக்கு மக்களின் ,தேசிய இனப்பிரச்சினை , அபிவிருத்திகள் , மற்றும் யானைப்பிரச்சினை , உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையாள்வதில் சவால்கள் இருக்கின்றன.அதற்காகவே நாம் சபை அதிகாரத்தினை கோரி நிற்கிறோம். அரசாங்கம் கூறுகிறது அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களில் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என தெரிவிக்கின்றது.எதிர்வரும் 30 ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் , இதனை அகிம்சை ரீதியாக அனுஷ்ரிப்பதற்கு தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement