• Aug 24 2025

சாரதி தூக்கத்தால் விபத்தக்குள்ளான கூலர் வாகனம்; வீதியில் சிதறிக்கிடந்த மீன்கள்! முறுகண்டியில் சம்பவம்

Chithra / Aug 24th 2025, 1:18 pm
image

கிளிநொச்சி - முறுகண்டி பகுதியில் இன்று அதிகாலை கூலர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று அதிகாலை 3.10 மணியவில் குறித்த விபத்து இடம்பெற்றது.

A9 வீதி முறிகண்டியில் சாரதி தூக்கம் காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்த கூலர் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. 

குறித்த வாகனம் காட்டுக்குள் சென்ற நிலையில் வீதியில் மீன்கள் சிதறிக்காணப்பட்டன. 

சாரதி  காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதி தூக்கத்தால் விபத்தக்குள்ளான கூலர் வாகனம்; வீதியில் சிதறிக்கிடந்த மீன்கள் முறுகண்டியில் சம்பவம் கிளிநொச்சி - முறுகண்டி பகுதியில் இன்று அதிகாலை கூலர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 3.10 மணியவில் குறித்த விபத்து இடம்பெற்றது.A9 வீதி முறிகண்டியில் சாரதி தூக்கம் காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்த கூலர் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம் காட்டுக்குள் சென்ற நிலையில் வீதியில் மீன்கள் சிதறிக்காணப்பட்டன. சாரதி  காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement