இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் மே தின பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான மேதினப் பேரணியானது, யாழ் நகரின் பிரதான சாலைகளூடாக சென்று யாழ் பொது நூலகம் முன்பாக ஒன்று கூடி மே தின பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான இப் பேரணியில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை பேரணி ஆரம்பமான வேளை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பேரணியில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி, அதிபர்,ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கு, மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு, கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு, விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மேதின பேரணி. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் மே தின பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான மேதினப் பேரணியானது, யாழ் நகரின் பிரதான சாலைகளூடாக சென்று யாழ் பொது நூலகம் முன்பாக ஒன்று கூடி மே தின பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான இப் பேரணியில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இதேவேளை பேரணி ஆரம்பமான வேளை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.பேரணியில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி, அதிபர்,ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கு, மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு, கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு, விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.