வவுனியா மாநகரசபையால் நடை பாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டு புதிதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமாக எழுந்த கடையால் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாநகரசபையானது வீதிப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த இலுப்பையடிப் பகுதி உள்ளிட்ட நகரப் பகுதியில் இருந்த நடை பாதை வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தியதுடன், குறித்த வியாபாரிகளுக்கு வவுனியா மாநகர சபை முன்பாகவும், பொலிஸ் நிலையம் முன்பாகவும் 10 க்கு 8 என்ற அளவுப் பிராமணத்தில் கடைகளை வழங்கியிருந்தது.
இவ்வாறு வழங்கப்பட்ட நிலையில், வவுனியா மாநகரசபை முன்பாக வழங்கப்பட்ட கடைத் தொகுதியில் வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிரந்தர வர்த்தக நிலையத்தை வைத்துள்ளவரும், ஏற்கனவே நடைபாதை வியாபாரத்தை நடாத்தமால் இருந்தவருமான பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தந்தை, மகள், மருமகன் என மூவருக்கு ஏனைய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளுக்கு செல்லும் பாதையில் கடை வழங்கப்பட்டு அவை மூன்றும் 25 இற்கு 30 என்ற அளவில் ஒரு பெரும் கடையாக நிலையாக கற்கள், சீமெந்து, கம்பி என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது
வவுனியா கடை ஒதுக்கீட்டில் பாரபட்சம் – பிரமாண்டமாக எழுந்த கடையால் வர்த்தகர்கள் விசனம் வவுனியா மாநகரசபையால் நடை பாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டு புதிதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமாக எழுந்த கடையால் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.வவுனியா மாநகரசபையானது வீதிப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த இலுப்பையடிப் பகுதி உள்ளிட்ட நகரப் பகுதியில் இருந்த நடை பாதை வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தியதுடன், குறித்த வியாபாரிகளுக்கு வவுனியா மாநகர சபை முன்பாகவும், பொலிஸ் நிலையம் முன்பாகவும் 10 க்கு 8 என்ற அளவுப் பிராமணத்தில் கடைகளை வழங்கியிருந்தது.இவ்வாறு வழங்கப்பட்ட நிலையில், வவுனியா மாநகரசபை முன்பாக வழங்கப்பட்ட கடைத் தொகுதியில் வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நிரந்தர வர்த்தக நிலையத்தை வைத்துள்ளவரும், ஏற்கனவே நடைபாதை வியாபாரத்தை நடாத்தமால் இருந்தவருமான பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தந்தை, மகள், மருமகன் என மூவருக்கு ஏனைய தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளுக்கு செல்லும் பாதையில் கடை வழங்கப்பட்டு அவை மூன்றும் 25 இற்கு 30 என்ற அளவில் ஒரு பெரும் கடையாக நிலையாக கற்கள், சீமெந்து, கம்பி என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது