• May 23 2025

இலங்கையில் ஆபத்தான இடமாக மாறிய தென் மாகாணத்தில் விசேட அறிவியல் ஆய்வு

Chithra / May 22nd 2025, 12:20 pm
image


அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். 

இதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த ஆய்வு நடவடிக்கையின் பின்னர் அவ்வாறான குற்றங்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஆபத்தான இடமாக மாறிய தென் மாகாணத்தில் விசேட அறிவியல் ஆய்வு அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். இதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஆய்வு நடவடிக்கையின் பின்னர் அவ்வாறான குற்றங்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement